சிறப்பு ரயில் இயக்கம்.
கோயம்புத்தூர் – பருணி இடையே திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி(வேலூர்), சென்னை பெரம்பூர் வழியாக வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்.
திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி(வேலூர்), சென்னை பெரம்பூர் வழியாக வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
வண்டி எண் 06059 கோவை – பருணி வாராந்திர சிறப்பு ரயில், கோவையில் இருந்து செவ்வாய்க்கிழமைகளில் பகல் 11.50க்கு புறப்பட்டு வியாழக்கிழமைகளில் பகல் 2.30க்கு பருணி சென்றடையும்.
ஜூன் 26ம் தேதி வரை இந்த ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது. வண்டி எண் 06060 பருணி – கோவை வாராந்திர சிறப்பு ரயில், பருணியில் இருந்து வெள்ளிக்கிழமைகளில் இரவு 11.45க்கு புறப்பட்டு திங்கட்கிழமைகளில் காலை 3.45க்கு கோவை வந்து சேரும். ஜூன் 28ம் தேதி வரை இந்த சிறப்பு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.
- செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
- https://chat.whatsapp.com/FOhL5abKd6h8aBpWAXOJfU