நிர்மலா தேவி வழக்கில் 6 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காதது ஏன்?: ஐகோர்ட் கேள்வி
: தமிழ்நாட்டையே உலுக்கிய நிர்மலா தேவி வழக்கில் 6 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவிகள் கொடுத்த புகாரை 6 ஆண்டுகளாக விசாகா கமிட்டிக்கு ஏன் அனுப்பவில்லை? என்றும் ஐகோர்ட் கேள்வி எழுப்பியது. அருப்புக்கோட்டையைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளிடம் பேரம் பேசியதாக 2018-ல் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி மற்றும் அவருக்கு உதவியதாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.