சத்ய பிரத சாகு விளக்கம்
தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்காக 1.58 லட்சம் மின்னணு வாக்கு இயந்திரங்கள் தயார்: சத்ய பிரத சாகு விளக்கம்
தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்காக 1,58,568 மின்னணு வாக்கு இயந்திரங்களை தயாராக வைத்துள்ளோம் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு தெரிவித்துள்ளார். 81,157 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 86,858 விவிபாட் இயந்திரங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மாலை 6 மணி வரை வரிசையில் நிற்கும் கடைசி வாக்காளர் வரை அனைவரும் வாக்களிக்கலாம். தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலில் 39 தொகுதிகளில் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 950 வேட்பாளர்களில் 874 பேர் ஆண் வேட்பாளர்கள், 76 பேர் பெண் வேட்பாளர்கள் என சத்ய பிரத சாகு தெரிவித்தார்.