ஜி 7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்த இங்கிலாந்து அரசு!
இங்கிலாந்து, கார்ன்வால் பிராந்தியத்தில் வருகின்ற ஜூன் மாதம் ஜி-7 உச்சிமாநாடு நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் வளர்ந்த நாடுகளான பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா ஆகிய 7 நாடுகள் கொண்ட ஜி 7 மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும்படி பிதரமர் மோடிக்கு இங்கிலாந்து அரசு அழைப்பு விடுத்துள்ளது.
இந்த மாநாட்டில் கொரோனா வைரஸ் மற்றும் பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பிரச்சனைகள் விரிவாக பேசப்படும் என்று கூறப்படுகிறது. ஜி7 மாநாட்டிற்கு முன்னதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியாவிற்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் இந்த அழைப்பு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
S.முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்.