முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
“எல்லோருக்கும் எல்லாம், அனைத்து மாவட்டங்களுக்கும் சீரான வளர்ச்சி என்பதே திராவிட மாடல் அரசின் நோக்கம்
சட்டப்பேரவை தேர்தல் வாக்குறுதியாக அளிக்கப்படாத, நான் முதல்வன் திட்டத்தால் ஏராளமான மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர். பல ஆயிரம் மாணவர்களின் கனவுகள், நிஜமாக மாறியுள்ளது
இன்னொரு தேர்தல் வாக்குறுதி அல்லாத திட்டம்தான் காலை உணவுத் திட்டம். சுமார் 16 லட்சம் மாணவர்கள் இத்திட்டத்தால் பயன்பெற்றுள்ளனர்”
நம்பர் 1 தமிழ்நாடு –
“ஜவுளி ஏற்றுமதியில் நம்பர் 1,
ரெடிமேட் ஏற்றுமதியில் நம்பர் 1,
தோல் பொருள் ஏற்றுமதியில் நம்பர் 1,
ஏற்றுமதி ஆயத்த நிலைக் குறியீட்டில் நம்பர் 1
எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியில் நம்பர் 1
கர்ப்பிணி சுகாதாரக் குறியீட்டில் நம்பர் 1
மகப்பேறுக்கு பிந்தைய கவனிப்பில் நம்பர் 1
50 சிறப்பு பொருளாதார மண்டலங்களுடன் நாட்டிலேயே நம்பர் 1
பழனிசாமி அவர்களே இதெல்லாமே நாங்கள் சொன்னவை அல்ல, மத்திய அரசின் புள்ளி விபரங்கள்.
அதிமுக ஆட்சியில் தொழில் செய்ய உகந்த மாநிலங்கள் தரவரிசையில் 14வது இடத்தில் இருந்த தமிழ்நாட்டை, திமுக ஆட்சியமைந்ததும் மூன்றாவது இடத்திற்கு முன்னேற்றியுள்ளோம்