முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
முதலமைச்சராக இருந்த மோடிக்கு பிரதமரானதும் மாநிலங்களைக் கண்டாலே பிடிக்கவில்லை.
மோடி ஆட்சியில் மக்கள் வாழ்வதே போராட்டமாக இருக்கிறது
மிகவும் மலிவான பிரிவினைவாத அரசியல் செய்து வருகிறார்
“திமுகவுக்கு தமிழ்நாட்டில் எதிர்ப்பலை வீசுவதாக பிரதமர் மோடி நேற்று பேசியுள்ளார். இதைப் பார்த்து சிரிப்பதா அல்லது அவரின் பகல் கனவைப் பார்த்து பரிதாபப் படுவதா என தெரியவில்லை
தமிழ்நாட்டில் பாஜக ஜெயிக்கும் என பிரதமரை யாரோ ஏமாற்றியுள்ளனர்
“பாஜகவுக்கு இன்னும் ஒரு வாய்ப்பு கிடைத்தாலும், வரலாறு திருத்தி எழுதப்படும்.
அறிவியல் பின்னுக்கு தள்ளப்பட்டு பிற்போக்கு கதைகள் புகுத்தப்படும். மக்களின் சிந்தனைகள் மழுங்கடிக்கப்படும். மக்களின் உரிமைகள் பறிக்கப்படும்
அம்பேத்கர் எழுதிய அரசியல் சாசனம் காற்றில் பறக்கவிடப்பட்டு, RSSன் சித்தாந்தம் நாட்டை ஆளும். இதையெல்லாம் தடுப்பது உங்கள் வாக்குதான்