செல்வம் பெருக ராமநவமி வழிபாடு
நாளை 17.4.2024 புதன்கிழமை அன்று ராம நவமி கொண்டாடப்பட இருக்கின்றது. இன்றைய தினமே உங்களுடைய வீட்டை எல்லாம் சுத்த பத்தமாக துடைத்து பூஜை அறையெல்லாம் துடைத்து நாளைய பூஜைக்கு வீட்டை தயார் செய்து கொள்ளுங்கள். நாளை காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்துக்கோங்க.பூஜையறையில் ராமரின் திரு உருவப்படம் இருந்தால் அதற்கு துளசி இலைகளை போடலாம். அனுமனின் திரு உருவப்படம் இருந்தால் அந்த படத்திற்கு துளசி இலையை போட்டு அலங்காரம் செய்யுங்கள். அப்படி எதுவுமே இல்லை என்றால் பெருமாளின் திருவுருவப்படத்திற்கு துளசி இலைகளால் அலங்காரம் செய்து கொள்ளுங்கள். மற்ற சுவாமி படங்களுக்கு எல்லாம் பூக்களால் அலங்காரம் செய்து கொள்ளுங்கள். வீட்டில் எப்போதும் போல விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள். ஒரு தாம்பூல தட்டை எடுத்துக் கொள்ளவும். அந்த தாம்பூல தட்டில் ஒரு மண் அகல் விளக்கை வைத்து, அதில் பசு நெய் ஊற்றி திரி போட்டுக் கொள்ளுங்கள். இந்த விளக்கை சுற்றி துளசி இலைகளால் அலங்காரம் செய்து கொள்ளுங்கள். அந்த விளக்குக்கு பக்கத்தில் ஒரு ரூபாய் நாணயத்தையும் வைத்து விடுங்கள்.
விளக்கை ஏற்றி விடுங்கள். இந்த விளக்குக்கு முன்பாக அமர்ந்து உங்களுக்குத் தெரிந்த ராம மந்திரங்களை சொல்லலாம். ஸ்ரீ ராம ஜெயம் சொல்லலாம். ராம ராம நாமத்தை உச்சரிக்கலாம். உங்களுடைய விருப்பம் தான். உங்களுக்கு தெரிந்த ராம மந்திரத்தை உச்சரித்து உங்களுக்கு இருக்கக்கூடிய பண கஷ்டங்கள் எல்லாம் சரியாக வேண்டும். கடன் சுமை குறைய வேண்டும் என்று மனதார நம்பிக்கையுடன் ஐந்து நிமிடங்கள் கண்களை மூடி பிரார்த்தனை வையுங்கள். இந்த விளக்கானது பிரம்ம முகூர்த்த நேரத்தில் நாளைய தினம் ஒரு மணி நேரம் வரை எறிந்தாலும் போதும். விளக்கு எரிந்து முடியும் வரை நீங்கள் அந்த விளக்குக்கு முன்பாக அமர்ந்து ராமரை நினைத்து ராம நாமத்தை ஜெபித்து மனதை ஒருநிலைப்படுத்தி தியானம் செய்தாலும் ரொம்ப ரொம்ப நல்லது.
இப்படி ராம நாமத்தை உச்சரிக்கும் போது உங்க பக்கத்தில் ஒரு மனப்பலகை போடுங்க. நீங்க உச்சரிக்கும் ராம நாமத்தை கேட்க ஹனுமான் வந்து அந்த இடத்தில் அமர்வார் என்பது ஐதீகம். ராம நவமி அன்று பிரம்ம முகூர்த்த நேரத்தில் ராமபிரானை நினைத்து இந்த துளசி விளக்கை வீட்டில் ஏற்றி வைத்து வழிபாடு செய்வது உங்கள் குடும்பத்திற்கு சுபிட்சத்தை தரும். குடும்பத்தில் இருக்கும் பணக்கஷ்டத்தை நீக்கும். நாளைய தினம் அதாவது புதன்கிழமை மாலை தட்டில் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்தீர்கள் அல்லவா அதை எடுத்து பீரோவில் பணப்புழக்கம் இருக்கக்கூடிய இடத்தில் வைத்து விடுங்கள். அந்த துளசி இலைகள் எல்லாம் வாடிய பிறகு கால் படாத இடத்தில் செடி கொடிகளுக்கு கீழே போட்டு விடுங்கள் வழிபாடு இவ்வளவுதான். நம்பிக்கை உள்ளவர்கள் இதை பின்பற்றி பலன் பெறலாம்.