அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம்
பாஜக-வின் தேர்தல் படம் டிரைலர் நல்லாருக்கும்; ஆனா படம் சொதப்பிடும்:
10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பாஜக காமராஜர் ஆட்சியை ஏன் கொடுக்கவில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கேள்வி எழுப்பியுள்ளார்.
பாஜக-வின் தேர்தல் படம் டிரைலர் தான் நல்லாருக்கும்; ஆனா படம் சொதப்பிடும் என்றார். இங்கு போட்டி அதிமுக, திமுக-விற்கு மட்டுமே என்றும், 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோது ஏன் காமராஜர் ஆட்சியை கொடுக்கவில்லை என்று செல்லூர் ராஜு கேள்வி எழுப்பியுள்ளார்.
சொன்னதையே மோடி செய்யவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை கொச்சைப்படுத்திய அண்ணாமலை உடன் கைகோர்த்து வாக்கு சேகரிக்கிறார் ஓ.பன்னீர் செல்வம் என்றும் செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார்.