தங்கத்தின் விலை
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.640 உயர்ந்திருப்பது நகை பிரியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த 15 நாட்களாகவே புதிய உச்சங்களை தொட்டு வருகிறது. கடந்த மாதம் 28ம் தேதி ஒரு சவரன் தங்கத்தின் விலை 50 ஆயிரத்தை தொட்டது. 29ம் தேதி சவரன் ரூ.51 ஆயிரத்தை கடந்தது. கடந்த 12ம் தேதி அதிரடியாக சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.54,440க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று ஆபரணத்தங்கம் அதிரடியாக சரிவை கண்டது.அதாவது, சவரனுக்கு ரூ.520 குறைந்து, ஒரு கிராம் ரூ.6,790க்கும், சவரன் ரூ.54,320-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.640 உயர்ந்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.80 உயர்ந்து ரூ.6,870க்கும், சவரன் ரூ.54,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.90.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து தங்கம் விலை ஜெட் வேகத்தில் அதிகரித்து வருவது நகை வாங்குவோரை கலக்கமடைய செய்துள்ளது. இப்படியே போனால் ஓரிரு நாளில் சவரன் ரூ.55 ஆயிரத்தை கடந்து விடுமோ? என்ற அச்சமும் நிலவி வருகிறது.The post இன்று ஒரே நாளில் ரூ.640 அதிகரிப்பு!: ரூ.55 ஆயிரத்தை நெருங்கும் ஆபரணத் தங்கத்தின் விலை…நகை வாங்குவோர் அதிர்ச்சி..!!
செய்தி பாபு சென்னை.