சென்னை முழுவதும் நடத்தப்பட்ட பறக்கும் படை

சென்னை முழுவதும் நடத்தப்பட்ட பறக்கும் படை சோதனையில் ₹39.47 கோடி அதிரடி பறிமுதல்: ₹61.12 லட்சம் போதைப்பொருட்கள் சிக்கியது

சென்னையில் வருமான வரித்துறை மூலம் ₹23 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள அம்மா மாளிகை கூட்டரங்கில், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, பல்வேறு கல்லூரிகளின் மாணவ, மாணவிகளிடையே தேர்தலில் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தேர்தல் குறித்த புதிர் போட்டி நிகழ்ச்சியை மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் நேற்று தொடங்கி வைத்து பேசியதாவது: சென்னையில் வசிக்கும் 10 பேரில் 4 பேர் தேர்தலில் வாக்களிப்பது இல்லை. இது பெருமைக்குரிய விஷயமா. வாக்களிப்பது குறித்து கடந்த முறை 18 வகையான விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். இந்த முறை 21 வகையான விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளோம்.முதல் தலைமுறை வாக்காளர்கள் நிச்சயமாக வாக்களிப்பதில் பங்களிக்க வேண்டும். உங்கள் பெற்றோரையும் வாக்களிக்க செய்ய வேண்டும். கடந்த முறை தேர்தலின்போது, சென்னையில் 2 தொகுதிகளில் 58% மற்றும் 64% வாக்குப்பதிவாகி இருந்தது. அதனை இந்த முறை 100% வாக்குப்பதிவாக மாற்ற இலக்கு வைத்துள்ளோம். நாங்கள் 80’ஸ் பேட்ச். எங்கள் காலத்தில் ஊரும், மாவட்டமும் மேடையாக இருந்தது. ஆனால் இன்று, உங்களுக்கு உலகமே மேடையாக இருக்கிறது. எனவே, தேர்தலில் தவறாமல் வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published.