இந்தியாவில் ஏர் டாக்ஸி அறிமுகம்!
மத்திய அரசின் உதான் திட்டத்தின் கீழ் சண்டிகரில் இருந்து ஹிசார் வரையிலான விமான டாக்ஸி சேவைகளை ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டர் வியாழக்கிழமை திறந்து வைத்தார். இரண்டாம் கட்டத்தில் ஹிசார் முதல் டெஹ்ராடூன் வரை விமான சேவைகளும் தொடங்கப்படும் என்றும், மூன்றாம் கட்டத்தில் மேலும் இரண்டு வழித்தடங்கள் சேர்க்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.
“நாட்டில் முதல்முறையாக, ஏர் டாக்ஸி வடிவத்தில் ஒரு சிறிய விமானம் சேவைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது” என்று முதல்வர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அவர் மேலும் கூறுகையில், “இரண்டாம் கட்டத்தில், ஹிசார் முதல் டெஹ்ராடூனுக்கான சேவைகள் ஜனவரி 18 ஆம் தேதி தொடங்கப்படும்.
மூன்றாம் கட்டத்தில், சண்டிகரில் இருந்து டெஹ்ராடூன் மற்றும் ஹிசார் தர்மஷாலாவுக்கு மேலும் இரண்டு வழிகள் ஜனவரி 23 ஆம் தேதி சேர்க்கப்படும் ” என தெரிவித்துள்ளார்.
ஒரு தனியார் நிறுவனத்தால் நடத்தப்படும் இந்த ஏர் டாக்ஸிகள் நான்கு இருக்கைகள் கொண்டவை, மேலும் வேகத்திற்கு 250 கிமீ / மணி நேரம் இருக்கும் என்று கட்டார் மேலும் கூறினார். “இந்த ஏர் டாக்ஸியைத் தொடங்க மாநிலத்திற்கும் நாட்டின் பிற பகுதிகளுக்கும் நான் பரிந்துரைகிறேன். ஏர் டாக்ஸிகள் மற்ற நாடுகளில் பிரபலமாக உள்ளன. இந்த ஏர் டாக்ஸிகளின் கட்டணங்களும் அவ்வளவு விலை உயர்ந்தவை அல்ல. சண்டிகரில் இருந்து ஹிசருக்கு வந்தால், சாதாரண
வோல்வோ பேருந்தில் ஒரு நபருக்கு கட்டணம் 700 ரூபாய். இங்கே, ஒரு பயணி ரூ.1,755 செலவிட வேண்டியிருக்கும், “என்று அவர் குறிபிட்டுள்ளார்,
S.முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்.