எம்ஜியாரின் “வேட்டைக்காரன்”வசூலில் முந்தியது
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் “கர்ணன்”படமும்,மக்கள் திலகம் எம்ஜியாரின் “வேட்டைக்காரன்”படமும் (14.01.1964)வெளியாகி 57 ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ளது.இரண்டு படங்களும் ஒரே நாளில் ஓர் பொங்கல் வெளியீடாக
ரிலீஸ் ஆனது…. இதில் எம்ஜியாரின் “வேட்டைக்காரன்”வசூலில் முந்தியது.
“கர்ணனும்” நல்ல வசூல் கண்டது ……
சிவாஜி,எம்ஜியார் இருவருக்குள்ளும் தொழில் ரீதியான போட்டா போட்டியும்,ரசிகர்கள் இடையே கடுமையான மோதல்களும் நடந்து கொண்டிருந்த காலமது. இரண்டு திலகங்களின் படங்கள் வெளிவரும் போது இரண்டு நாயகர்களின்
ரசிகர்களும் கடுமையாக மோதிக் கொள்வார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில்தான்.கர்ணனும்,
வேட்டைக்காரனும் தயாராகிக் கொண்டிருந்தன.இயக்குனர் பி.ஆர்.பந்துலு
அவர்களின் “கர்ணன்” மிகுந்த பொருட்செலவில் வண்ணப்படமாக பல முன்னணி நட்சத்திரங்களை வைத்து பிரமாண்டமான தயாரிப்பாக அமைந்திருந்தது.
“கர்ணன்”படத்தின் படப்பிடிப்பு பாதியளவில் முடிவடைந்து அடுத்தக் கட்ட பட்படிப்பிற்கு
செல்லும் போதுதான் எம்ஜிஆரின் “வேட்டைக்காரன்”படம் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த படத்தை தேவர் ஃபிலிம்ஸ் சார்பில்
அதன் அதிபர் சாண்டோ எம்.எம்.ஏ.சின்னப்பா தேவர் தயாரித்திருந்தார்.
வரது சகோதரர்
எம்.ஏ.திருமுகம் இயக்கியிருந்தார்.இதில்
“மகாதேவி “,”பரிசு”,ஆகிய படங்களுப்பின்
எம்ஜியாருடன் ஜோடியாக நடிகையர் திலகம் சாவித்திரி நடித்திருந்தார். கறுப்பு வெள்ளையில் குறைந்த பட்ஜெட்டில்,குறுகிய நாட்களில் சென்னையில் உள்ள சில காட்டுப்பகுதிகளில் மட்டும் எடுக்கப்பட்ட படம்
“வேட்டைக்காரன் “.அப்போது “கர்ணன்”14.01.1964 அன்று பொங்கலன்று வெளியாக தயாரான நேரத்தில்’ “வேட்டைக்காரனும்”அதே நாளில் வெளிவர இருக்கும் செய்தியை அறிந்த பி.ஆர்.பந்துலு சிவாஜியிடம் இது பற்றி கலந்தாலோசித்தார்.இரண்டு படங்களும் சற்று இடைவெளி விட்டு வெளியானால்
தயாரிப்பாளர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.”கர்ணன்”படத்தை எம்ஜியாருக்கு
போட்டுக்காட்டினார்கள்.சிவாஜியின் நடிப்பு கண்ட எம்ஜியார் சிவாஜியைக் கட்டியணைத்து கர்ணனாகவே வாழ்ந்து காட்டியிருக்கிறீர்கள் என வாழ்த்திவிட்டு சென்றார்.அப்போது தேவரிடம் “வேட்டைக்காரன்” சற்று தள்ளி வெளியானால் இரண்டு படங்களும் பிரமாதமாக வசூல் காணும் என பந்துலு கூற,அதற்கு தேவர் சின்னவரிடம் (எம்ஜியார்) இது பற்றி பேச இரண்டு படங்களும் நன்றாக வந்திருக்கின்றது எனவே இரண்டையும் ஒரே நாளில் ரிலீஸ் செய்யலாம் என எம்ஜியார் கூறிவிட்டார்.
இறுதியில் இரண்டு படங்களும் ஒன்றாக வெளியானது.தியேட்டர்கள் வாசலில் “கர்ணன் “திரைப்பட பேனர்கள் பிரமாண்டமாக வைக்கப்பட்டது. சூரிய பகவான் ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் வருவது போல் பேனர் வைக்கப்பட்டது.
அதேபோல் “வேட்டைக்காரன் “வெளியான தியேட்டர்களில் இரும்பு கூண்டு வைத்து அதில் உண்மையான புலியையும் அடைத்து விளம்பரம் செய்தனர்,புலியைப் பார்த்தவர்கள் படத்தையும் பார்த்தார்கள்
எம்ஜியாரின் “வேட்டைக்காரன்”வசூலில் “கர்ணனை”முந்தியது. “கர்ணனும்”நல்ல வசூல் கண்டது. சில ஆண்டுகளுக்கு முன்பாக “கர்ணன் “திரைப்படம் டிஜிட்டலில்
வெளிவந்து 100 நாட்கள் ஓடி பழைய சாதனையை முறியடித்தது.பின்னாளில் இயக்குனர் பி.ஆர்.பந்துலு எம்ஜியாரை வைத்து எடுத்த “ஆயிரத்தில் ஒருவன் “மாபெரும் வெற்றியைப் பெற்றது.
மக்கள் திலகம் பிறந்த நாளில் இப்பதிவு அவர்களது ரசிகர்களுக்கு சமர்ப்பணம்.
ஆக்கம்:எஸ்.கணேசன் ஆச்சாரி சதீஷ் கம்பளை இலங்கை…
செய்தியாளர் விக்னேஸ்வரன்