பிரிட்டன் பணி விசாவுக்கு விண்ணப்பிக்கலாம்

எவ்வளவு ஊதியம் இருந்தால் பிரிட்டன் பணி விசாவுக்கு விண்ணப்பிக்கலாம்?

பிரிட்டனில் சென்று பணியாற்ற வேண்டும் என்று விரும்புவோருக்கு ஒரு சின்ன செக் வைக்கப்பட்டுள்ளது. அதாவது, பிரிட்டன் விசாவுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனில், ஆண்டுதோறும் அதிகளவில் வெளிநாட்டினர் வந்து தஞ்சமடைவதைத் தவிர்க்கவே, ரிஷி சுனக் தலைமையிலான அரசு இந்த புதிய முடிவை எடுத்துள்ளது.

கடந்த 2023ஆம் ஆண்டு மட்டும் பிரிட்டனில் சுமார் 7,45,000 வெளிநாட்டில் தஞ்சமடைந்துள்ளனர். இது மிக மிக அதிகம் என்று குறிப்பிட்டுள்ளார் ரிஷி சுனக்.

திறன்வாய்ந்த இந்திய தொழிலாளர்களுக்கான விசா வழங்கும் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. இதுவரை பாயிண்ட் அடிப்படையிலான முறையில், பிரிட்டன் விசாவுக்கு பலரும் விண்ணப்பித்து வந்தனர். ஆனால், தற்போது அவ்வாறு விண்ணப்பிப்பவர்களுக்கு அதிக ஊதியமும் இருக்க வேண்டும்.

குறைந்தது அவர்கள் 38,700 யூரோ சம்பாதிக்க வேண்டும். இது முன்பு 26,200 யூரோவாக இருந்தது. கிட்டத்தட்ட 50 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், இது சுகாதார ஊழியர்கள், ஆசிரியர்கள், சமூக சேவை உள்ளிட்ட துறைகளுக்குப் பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.