அமித் ஷா ஏப்.12-ல் பிரச்சாரத்துக்காக தமிழகம் வருகை
தேர்தல் பிரச்சாரத்துக்காக இரண்டு நாள் பயணமாக நாளை மறுநாள் (ஏப்.12) பாஜக முக்கியத் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா தமிழகம் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேர்தல் பிரச்சாரத்துக்காக இரண்டு நாள் பயணமாக நாளை மறுநாள் பாஜக முக்கியத் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா தமிழகம் வரவுள்ளார். வரும் 12-ம் தேதி மதியம் 12 மணி அளவில் மதுரை வருகிறார் அமித் ஷா. அன்று மதியம் 3.50 மணிக்கு சிவகங்கையில் நடைபெறும் வாகன பேரணியில் பாஜக வேட்பாளர் தேவநாதன் யாதவை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்கிறார்.