முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
“சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை விரிவாக்கம் செய்வதாக மோடி கூறியுள்ளார்.
ஆனால், அந்த திட்டத்திற்கு தடையாக இருப்பவரே அவர்தான். உரிய நிதி வழங்காததால் திட்டப் பணிகள் தாமதமாகிறது
2020ம் ஆண்டு மெட்ரோ விரிவாக்கப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. தொடர்ந்து பல முறை கோரிக்கை விடுக்கப்பட்டும் இன்று வரை மத்திய அரசின் பங்கீடு அளிக்கப்படவில்லை.
மாநில அரசின் நிதியிலேயே மெட்ரோ பணிகள் நடக்கின்றன. இதனால் ஆண்டுக்கு ₹12,000 கோடி கூடுதல் செலவாகிறது. இதனை மறைத்து மோடி பச்சைப் பொய் பேசுகிறார்
சாதியாலும், மதத்தாலும் மக்களை பிளவுபடுத்தும் மோடி, திமுகவை குற்றம் சாட்டலாமா?
இப்போது கூட சமூக நீதி நிறைந்த காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை, முஸ்லிம் லீக்கின் தேர்தல் அறிக்கை என பேசியுள்ளார்
10 ஆண்டுகளாக பிரதமராக இருந்தும் வெளியே சொல்லக் கூட சாதனைகள் இல்லாத பிரதமர், மதத்தை கையில் எடுத்துள்ளார்”