பனையோலையால் தேர்தல் விழிப்புணர்வு பதாகை

பனையோலையால் தேர்தல் விழிப்புணர்வு பதாகை.. சுற்றுலா பயணிகளை கவர்ந்த கைவண்ணம்

பேக்கரும்பு அப்துல்கலாம் தேசிய‌ நினைவிடத்தில் 100 விழுக்காடு வாக்குகளிப்பது குறித்தும், எனது வாக்கு எனது உரிமை என்ற தலைப்பில் பனையோலையால் பிண்ணப்பட்ட பதாகைகள் வைத்து சுற்றுலா பயணிகள், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு.. சுற்றுலா பயணிகள் கவர்ந்ததால் அதன்முன் நின்று புகைப்படங்களை எடுத்து வருகின்றனர்.

தமிழகத்தில் ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி அன்று நடைபெற உள்ளது, இதற்காக 40- தொகுதிகளிலும் வேட்பாளர் வாக்காளர்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பதில் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்காக ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் தேர்தல் ஆணையமும் இணைந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.