கலைக்கட்டும் பெரிய கோவில் சித்திரை திருவிழா

கலைக்கட்டும் பெரிய கோவில் சித்திரை திருவிழா… மேஷ வாகனத்தில் வலம் வந்த முருகப்பெருமானை காண திரண்ட பக்தர்கள்.

உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரைப் பெருவிழா 18 நாட்கள் விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

அதன்படி, நிகழாண்டு சித்திரைப் பெருவிழா ஏப்ரல் ஆறாம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய நிலையில்,தினந்தோறும் காலை மற்றும் மாலை நேரத்தில் சாமி அலங்காரம் மற்றும் பல்லக்கில் சாமி ஊர்வலம் நடைபெற்று வருகிறது. அதன்படி ஏப்ரல் ஒன்பதாம் தேதி நடைபெற்ற நான்காம் நாள் விழாவில் காலையில் விநாயகருக்கு சந்தனக் காப்பு அலங்காரம் நடைபெற்றதை அடுத்து மாலையில்மேஷ வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி புறப்பாடு நடைபெற்றது.

கோயில் திருச்சுற்றில் வளம் வந்த முருகப்பெருமானுக்கு யாகசாலை பூஜைகள் நிறைவுற்று தஞ்சையில் உள்ள நான்கு ராஜ வீதிகளிலும் சாமி ஊர்வலம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஏப்.20-ம் தேதி காலை 7 மணிக்கு நான்கு ராஜவீதிகளில் தேரோட்டமும், ஏப்ரல் இருபத்து மூன்றாம் தேதி சிவகங்கை பூங்காவில் தீர்த்தவாரியும் நடைபெறவுள்ளன.

விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை மற்றும் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் இணைந்து செய்து வருகின்றன

Leave a Reply

Your email address will not be published.