ஒரு நாளில் தண்ணீர் அருந்த சரியான நேரம் எது தெரியுமா

உடல்நல ஆரோக்கியத்திற்கான டிப்ஸ்கள், அறிவுரைகள் என சோசியல் மீடியாவில் தினம்தோறும் ஆயிரக்கணக்கான வீடியோக்களையும் பதிவுகளையும் பார்க்க முடிகிறது. ஆனால் இணையத்தில் கிடைக்கும் தகவல்களை அப்படியே ஏற்றுக்கொண்டு செயல்படுத்துவதற்கு பதிலாக, அதை ஒன்றுக்கு இரண்டு தடவை ஆராய்ந்து பார்ப்பது நல்லது.

சமீபத்தில் பிரபல டயட்டிசீயன் சிம்ரன் வோராவின் பதிவு ஒன்று பெரும் வைரலானது. அதில் ஒரு நாளில் தண்ணீர் அருந்துவதற்கான 7 சிறந்த நேரம் என்ற பட்டியல் ஒன்றை அவர் வெளியிட்டிருந்தார். அது பற்றியே இன்று விளக்கமாக பார்க்கப் போகிறோம்.

காலையில் எழுந்ததும்: காலையில் எழுந்ததும் தண்ணீர் குடிப்பதால் நம்முடைய உடலுக்குள் இருக்கும் பாகங்கள் துரிதமாக செயல்படுவதற்கு உதவியாக இருக்கின்றன. இதனால் உங்கள் மெடபாலிஸம் தூண்டப்பட்டுகின்றன. இரவு முழுவதும் பல மணி நேர தூக்கத்திற்குப் பிறகு உடலுக்கு நீர்ச்சத்து கிடைக்கிறது. அதுமட்டுமின்றி உடலில் உள்ள நச்சுகள் நீங்கவும் உதவியாக இருக்கிறது.

உடற்பயிற்சிக்குப் பின்: உடற்பயிற்சி செய்கையில் வியர்வை வழியாக நம் உடலில் உள்ள நீர்ச்சத்தை இழக்கிறோம். உடற்பயிற்சிக்குப் பின் தண்ணீர் குடிப்பதால் இழந்த நீர்சத்தை மீண்டும் பெறுகிறோம். இதனால் நம்முடைய இதயத்துடிப்பும் வழக்கமான நிலைக்கு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.