தீவிரவாதிகளுக்கு பிரியாணி ஊட்டி விடும் ஆட்சி அமைய வேண்டுமா? யோகி ஆதித்யநாத்
மக்கள் தங்கள் வாக்குகளை தவறான நபர்களுக்கு அளிக்கும் போது அமையும் ஆட்சியானது தீவிரவாதிகளுக்கு பிரியாணி ஊட்டி விடும் ஆட்சி அமைய காரணமாகி விடும் என்று உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கலந்துகொண்டு பேசினார். அப்போது கடந்த 10 ஆண்டு கால ஆட்சியின் சாதனைகளை மக்களுக்கு விளக்கி கூறினார். அப்போது, “நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் முக்கியமானது. இந்தியாவின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் அது பெரும் பங்கு வகிக்கும். வாக்கு அளிக்கும் போது சிந்தித்து வாக்களியுங்கள்.” என மக்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும் , “கடந்த 10 ஆண்டுகாலத்தில் உலகமே இந்தியாவை திரும்பி பார்க்கும் வகையில் பொருளாதாரத்தில் பெரும் மாற்றத்தை கண்டுள்ளது. நீங்கள் அடுத்த 5 ஆண்டுகளுக்கான இந்தியாவின் வளர்ச்சிக்காக வாக்களிக்கவுள்ளீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 2014-க்கு முன்னர் நடந்த ஆட்சியையும் கடந்த 10 ஆண்டுகாலமாக நடைபெற்று வரும் ஆட்சியையும் ஒப்பிட்டு பாருங்கள். தவறான நபர்களுக்கு வாக்குகள் சென்றபோது, தீவிரவாதிகளுக்கு பிரியாணி ஊட்டிய அரசு உருவானது’’ என்றார்.
தொடர்ந்து பேசிய யோகி ஆதித்யநாத், முன்னர் இந்து மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட குருநானக் தேவிற்காக தனி ராஜ்ஜியம் இருந்தது. காங்கிரஸ் ஆட்சியில் அது பிளவுப்பட்டது. தற்போது பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் அது மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஆம் அங்கு செல்வதற்கான தனி பாதை பிரதமரால் அமைக்கப்பட்டுள்ளது. இது பிரதமர் மோடியால் மட்டுமே சாத்தியமானது.” என மக்களுக்கு எடுத்துக்கூறினார்.