ஆரோக்கியத்தின் திறவுகோலாகும் மலர் மருத்துவம்
‘எனக்கு தலைவலி பிரச்னை இருந்தது. தலைவலி வந்தால் தொடர்ந்து மூன்று நாட்கள் வரை இருக்கும். மைக்ரேன் தலைவலி போல் வலிக்கும். காரணம், என்னுடைய கோபம். அதற்கு நான் மலர் மருத்துவம் எடுத்துக்கொண்டேன். அன்று முதல் என் கோபம் குறைந்து… பாசிடிவாக சிந்திக்க ஆரம்பித்தேன்’’ என்கிறார் துர்கா தேவி. கோவையைச் சேர்ந்த இவர் தன் மனதுக்கு ரிலாக்ஸ் கொடுத்த அந்த மருத்துவத்தை முறையாக பயின்று, அதன் மூலம் மற்றவர்களுக்கும் அதனை பரிந்துரை செய்து வருகிறார்.