உயர்ந்த உள்ளம் திரு.பாலமுருகன் அவர்கள்
உயர்ந்த உள்ளம் திரு.பாலமுருகன் அவர்கள்
உயர்ந்த உள்ளங்கள்
நமது சமூகத்தில் மனிதர்கள் ஒருவரை ஒருவர் சார்ந்தே வாழ்கின்றனர் , அவர்களில் ஒருவர் உயர்ந்தவர் மற்றொருவர் உயர்ந்த மனிதர்களிடம் உதவி கேட்பவர் , இந்த வாழ்க்கை சக்கரத்தில் யார் பெரியவர் என்ற போராட்டத்தில் வாழும் மக்களிடம் இருந்து மற்றொரு ஜீவன்களும் வாழத்தான் செய்கிறார்கள் . அவர்கள் சொந்த பிள்ளைகள் , கணவன் , என தன் உறவுகளால் விரட்டி அடிக்கப்பட்டு தனக்கு தினமும் ஒரு வேலையாவது உணவு கிடைக்காதா என ஏங்கி வருபவர்கள் .இவர்களை போன்ற கைவிடப்பட்டு இயலா நிலையில் வாழும் ஆதரவற்ற ஜீவன்களை நாம் திரும்பி கூட பார்ப்பதில்லை , அவர்களுக்கும் பாசம் , பந்தம் , அன்பு , உறவு என அனைத்தும் சார்ந்து ஏக்கங்கள் இருக்கும் என நாம் நினைத்துக்கூட பார்ப்பதில்லை . இது ஒரு புறம் இருக்க ஆதரவற்ற நிலையில் உள்ள ஜீவன்களை தன் சொந்தங்களாக நினைத்து அவர்களுக்கு உணவு கொடுத்து, போற்றி பாதுகாக்கும் மனிதர்கள் பூமியில் வாழும் கடவுள்களே ஆவர் , இவர்களே உயர்ந்த உள்ளங்களாகவும் அனைவரின் மனதிலும் வாழும் கருணை தெய்வங்களாகவும் இருக்கின்றனர் , இது போன்ற கருணை உள்ளம் கொண்ட மா மனிதர்களைப் பற்றி இப்பகுதியில் தொடர்ச்சியாக பார்க்க இருக்கிறோம்,
காவல்துறை என்றாலே மக்கள் மத்தியில் ஒரு கலங்கம் , வெறுப்பு , பொய் வழக்கு என்று நீண்டு கொண்டே செல்லும் , அவைகள் காவல்துறையினால் நடப்பவை அல்ல , காவல் துறை அதிகாரிகளுடைய தவறான அணுகுமுறை மற்றும் அதிகார துஷ்பிரயோகம் , இவைகளால் காவல்துறைக்கும் கலங்கம் ஏற்பட்டு விடுகிறது , காவல் பணி என்பது மிகவும் சிரத்தையுடன் பொதுமக்களுக்கு சேவை செய்யும் உன்னதமான பணி அதை நன்கு உணர்ந்த , விருதுநகர் மாவட்டம் , அருப்புக்கோட்டை B1 நகர் காவல் ஆய்வாளர் திரு.பாலமுருகன் அவார்கள் செய்த சேவை ஆதரவற்ற ஜீவன்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் பெறும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அருப்புக்கோட்டை நகர் எல்லைக்குள் உட்பட்ட பாளையம்பட்டி கிராமத்தில், ரவீந்திரநாத் சுகந்தி (RS) அறங்கட்டளை, இலாப நோக்கமற்ற தொண்டு நிறுவனம் இயங்கி வருகிறது , இங்கு தினமும் ஆதரவற்ற முதியோர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது, இதைக் கேள்விப்பட்ட திரு. பாலமுருகன் காவல் ஆய்வாளர் அவர்கள் , தனது கடுமையான பணிச் சூழலிலும் , ஆதரவற்ற நபர்களை பார்வையிட வந்து, பொங்கல் நிகழ்வில் தனது பங்களிப்பாக அவர்களுக்கு உணவுகளை தன் கையினால் பரிமாறி சேவை செய்துள்ளார் அதுமட்டுமின்றி , அனைவரிடமும் அன்பாகவும் ஆதரவாகவும் பேசி, அவர்களின் குறைகளை பொறுமையாக கேட்டறிந்து , அவர்களுக்கும் மற்றும் கிராமத்தினுடைய முன்னேற்றம் குறித்தும் தன்னால் முடிந்த உதவிகளை செய்து தருவதாகவும் கூறி நம்பிக்கை கொடுத்துச் சென்றுள்ளார் , தன் பிள்ளைகள் சொந்த உறவுகள் என யாரும் கேட்பாரற்று இருக்கும் எங்களைப் பார்க்க ஒரு காவல் அதிகாரியே வந்து எங்களுக்கு சேவை செய்துள்ளார் எனக் கூறி பேரானந்தம் கொண்ட முதியவர்கள் அணைவரின் கண்களிலும் ஆனந்தக் கண்ணீர் பெருகியது , இச் சம்பவம் இக் கிராமத்தில் பெறும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது,
இவரைப் போன்று கருணை உள்ளம் படைத்த அதிகாரிகளால் தான் காவல் துறைக்கு பெருமை வந்து சேர்கிறது, மக்கள் பணியே மஷேசன் பணி என்பார்கள்.
அதை மறந்து தன் சுய நலத்துக்காக பொது மக்களை மிரட்டி வாழும் காவல்துறை அதிகாரிகள் மத்தியில் , இவரைப் போன்ற இரத்தின கற்களும் இருக்கிறார்கள் , திரு. பலாமுருகன் காவல் ஆய்வாளர் அவர்களின் உயர்ந்த உள்ளத்தை , ஆதரவற்ற முதியோர்கள் மற்றும் பாளையம்பட்டி கிராம பொது மக்கள் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்
த.விஜய் பாண்டியன்
வழக்கறிஞர் / சமூக சேவாகர்