ஐ.பெரியசாமி மீதான வழக்கு விசாரணைக்கு தடை
அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளபோது கீழமை நீதிமன்றத்தில் விசாரணையை தொடரக்கூடாது. அடுத்த விசாரணைக்கான வரும் தேதி வரை கீழமை நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணைக்கு தடை விதிக்கப்படுவதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஐ.பெரியசாமி தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது.