ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தகவல்
ஓட்டுக்கு பணம் தருவதை தவிர்க்க வலியுறுத்தி கோவையில் உண்ணாவிரதம் மேற்கொள்ள அனுமதி தர தயார்:
ஓட்டுக்கு பணம் தருவதை தவிர்க்க வலியுறுத்தி கோவையில் உண்ணாவிரதம் மேற்கொள்ள அனுமதி தர தயார் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. உண்ணாவிரதத்துக்கு நிபந்தனையுடன் அனுமதி தர தயார் என ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்திருக்கிறது. உண்ணாவிரதத்துக்கு அனுமதி கோரி கோவை மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் தாக்கல் செய்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. ஜனநாயகத்தில் நாட்டின் தலைவிதியை தீர்மானிக்கும் மதிப்புமிக்க, சக்திவாய்ந்த அகிம்சை ஆயுதம் வாக்கு என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.