காங். மேலிட பொறுப்பாளர் அஜோய் குமார்
நம் பிரதமர் உலகில் அதிகம் பொய் பேசும் நபராக உள்ளார்: காங். மேலிட பொறுப்பாளர் அஜோய் குமார்
நம் பிரதமர் உலகில் அதிகம் பொய் பேசும் நபராக உள்ளார் என காங். மேலிட பொறுப்பாளர் அஜோய் குமார் தெரிவித்துள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங். பொறுப்பாளர் அஜோய்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், சமூகநீதி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவை காங்கிரசின் முக்கிய குறிக்கோளாக உள்ளன. பெரும் முதலாளிகளுக்கு ரூ.18 லட்சம் கோடி வரி சலுகையை பாஜக அரசு வழங்கியுள்ளது. படித்த இளைஞர்கள் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாற்றுகின்றனர் என குறிப்பிட்டார்.