சித்தூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் பேச்சு

ஆந்திர மாநில தலைவராக ஷர்மிளா பொறுப்பேற்றதில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் பலம்

சித்தூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் பேச்சு

சித்தூர் : ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சி தலைவராக ஷர்மிளா பொறுப்பேற்றதில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு கூடுதலாக பலம் கிடைத்துள்ளது என சித்தூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் பேசினார். சித்தூர் காந்தி சாலையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இந்தியா கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் சித்தூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் டிக்கி ராயல் தலைமை தாங்கி பேசியதாவது:

ஆந்திர மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தலைவராக ஷர்மிளா பொறுப்பேற்றதில் இருந்து, காங்கிரஸ் கட்சிக்கு கூடுதலாக பலம் கிடைத்துள்ளது. இந்தியா கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் கட்சிகளான இந்திய மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ்வாடி, ராஷ்ட்ரிய ஜனதாதால கட்சி, ஆம்ஆத்மி உள்பட பல்வேறு கட்சி மாவட்ட தலைவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. வரும் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் சித்தூர் சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.