திண்டுக்கல் மக்களவைத் தொகுதி – ஓரு பார்வை
அதிமுகவிற்கு அரசியல் அடையாளம் தந்த தொகுதி திண்டுக்கல்.
மறுசீரமைப்புக்கு பிறகு அதிக மாற்றங்களைக் கொண்ட தொகுதியில் திண்டுக்கல்லும் ஒன்று. பழனி நாடாளுமன்ற தொகுதி நீக்கப்பட்டு அதில் இருந்து பழனி, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட சட்டப்பேரவைத் தொகுதிகள் திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் இணைக்கப்பட்டன.
அதிமுக என்னும் திராவிட இயக்கம் உதயமானதும், அது சந்தித்த முதல் தேர்தல் திண்டுக்கல் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல். திமுகவில் இருந்து பிரிந்த புதிய கட்சியை தொடங்கிய எம்ஜிஆர் சந்தித்த முதல் தேர்தலிலேயே அவருக்கு வெற்றியைத் தேடித் தந்தது திண்டுக்கல் தொகுதி. மிகப்பலத்துடன் இருந்த திமுகவை மூன்றாவது இடதுக்குத் தள்ளி இடைத்தேர்தல். இந்தத் தேர்தலில் எம்ஜிஆர் களமிறக்கிய வேட்பாளர் மாயத்தேவர் பெரும் வெற்றி பெற்றார்.
அதிமுகவுக்கு தேர்தல்தோறும் வெற்றி தேடித்தரும் சின்னமான இரட்டை இலையும் இந்தத் தேர்தலில் தான் களம் இறங்கியது. அதுமுதலே திண்டுக்கல் தொகுதி அதிமுகவுக்கு பல தேர்தல்களில் வெற்றி தேடி தந்துள்ளது. பெரும்பாலும் அதிமுகவும், திமுகவும் நேரடியாக மோதியுள்ள இந்தத் தொகுதியில் சிலமுறை கூட்டணியுடன் காங்கிரஸ் வென்றுள்ளது.
இடம்பெற்றுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள்:
- திண்டுக்கல்
- நத்தம்
- பழனி
- ஒட்டன்சத்திரம்
- ஆத்தூர்
- நிலக்கோட்டை (தனி)
திண்டுக்கல் தொகுதி மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை:
15,97,458
- ஆண் வாக்காளர்கள்:
7,75,432 - பெண் வாக்காளர்கள்: 8,21,808
- மூன்றாம் பாலின வாக்காளர்கள்: 218
முந்தைய தேர்தல்களில் வெற்றிபெற்றவர்கள்
1971
ராஜாங்கம், திமுக
1977
மாயத்தேவர், அதிமுக
1980
மாயத்தேவர், திமுக
1984
நடராஜன், அதிமுக
1989
திண்டுக்கல் சீனிவாசன், அதிமுக
1991 திண்டுக்கல் சீனிவாசன், அதிமுக
1996
என்எஸ்வி சித்தன், தமாகா
1998 திண்டுக்கல் சீனிவாசன், அதிமுக
1999 திண்டுக்கல் சீனிவாசன், அதிமுக
2004
என்எஸ்வி சித்தன், காங்கிரஸ்
2009
என்எஸ்வி சித்தன், காங்கிரஸ்
2014
உதயகுமார், அதிமுக
2019 வேலுசாமி P, திமுக வெற்றி பெற்றார்.
2024இல்
மா.கம்யூனிஸ்ட் சார்பில் சச்சிதானந்தம்
பாமகவில் திலகபாமா
எஸ்.டி.பி.ஐயில் முபாரக்
நாம் போட்டியில் உள்ளனர்.