அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம்
போதும் திமுக, போதும் அதிமுக என்ற மனநிலைக்கு மக்கள் வந்து விட்டார்கள்: அன்புமணி
57 ஆண்டுகளாக திமுக அதிமுக மாறி மாறி தமிழ்நாட்டை ஆட்சி செய்து கொண்டு நாசப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டின் முழுவதும் நான் சுற்றி வந்ததில், இவர்கள் இருவரும் போதும் என்ற மனநிலை மக்களுக்கு வந்துவிட்டது.
இவர்கள் இருவரும் மாறி மாறி ஆட்சி செய்ததால் உங்களுக்கு என்ன கிடைத்தது? இளைஞர்களுக்கு வேலை கிடைத்ததா? விவசாயிகள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா? ஒரு தாய்மார்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா? எங்கு பார்த்தாலும் சாராயம் சாராயம், மறுபக்கம் பார்த்தால் போதை பொருள், அமெரிக்காவில் கிடைக்கும் அத்தனை போதை பொருட்கள் தமிழ்நாட்டில் கிடைக்கிறது.
என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம்