தனியார் நிறுவன மேலாளர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்
சென்னையில் பிறந்தநாள் கொண்டாடிவிட்டு சாலையில் நடந்து சென்ற தனியார் நிறுவன மேலாளர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். தியாகராயர் நகரில் உள்ள அலுவலகத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் மேலாளர் சேதுராமன் (60). கொண்டாட்டத்துக்கு பிறகு நந்தனம் தேவர் சிலை அருகே சாலையில் நடந்து சென்றபோது மயங்கி விழுந்து சேதுராமன் உயிரிழந்தார்