அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
மீனவர்கள் மீது தாக்குதலே நடக்காது என்று வாக்குறுதி தந்து ஆட்சிக்கு வந்தது பாஜக என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
“வாக்குறுதி தந்து ஆட்சிக்கு வந்த பாஜக அரசு, மீனவர்கள் மீதான தாக்குதல்களை ஏன் தடுத்து நிறுத்தவில்லை? தேர்தல் வந்ததும் இத்தனை முறை தமிழ்நாட்டுக்கு வரும் மோடி, வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டபோது ஏன் வரவில்லை? 2 கோடி வேலைவாய்ப்பு தருகிறேன் என்ற உங்கள் வாக்குறுதி எங்கே போனது?” என அமைச்சர் உதயநிதி பேசினார்.