தேனியில் நா.த.க. வேட்பாளருக்கு ஆதரவாக சீமான் பரப்புரை.
எனக்கு வாக்களிக்கவிட்டாலும், பாஜக-வுக்கு வாக்களிக்க வேண்டாம்”: தேனியில் நா.த.க. வேட்பாளருக்கு ஆதரவாக சீமான் பரப்புரை.
எனக்கு வாக்களிக்கவிட்டாலும், பாஜக-வுக்கு வாக்களிக்க வேண்டாம் என தேனியில் நா.த.க. வேட்பாளருக்கு ஆதரவாக சீமான் பரப்புரை நடத்தினார். மக்களவை தேர்தலுக்கு 2 வாரங்களே இருக்கும் நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
தேனி அல்லி நகரம், கம்பம் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், கச்சதீவுகளை மீட்போம் என்று கூறுபவர்களை நம்பக்கூடாது என்றார்.
எனக்கு வாக்களிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டார்.