இரும்புலியூரில் சிபிஐ அதிகாரி போல் பேசி ஆள்மாறாட்டம்
சென்னை தாம்பரம் அருகே இரும்புலியூரில் சிபிஐ அதிகாரி போல் பேசி ஆள்மாறாட்டம் செய்து மோசடி செய்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சுரேஷ்குமார் என்பவரிடம் டிராய் அமைப்பில் இருந்து பேசுவதாக கூறி மிரட்டி ரூ.50 லட்சம் பணம் பறித்ததாக புகார் அளித்துள்ளனர். பெண்களை கொடுமைப்படுத்தும் விதமாக எஸ்.எம்.எஸ்., விளம்பரங்கள் செய்துள்ளதாக கூறி மிரட்டியதாக புகார் அளித்தனர். போலீசாரின் விசாரணையை தொடர்ந்து அஃப்ரித், வினீஷ், முனீர், ஃபசலு ரகுமான் ஆகியோரை கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.