அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி
மீண்டும் மோடி வரக்கூடாது என கூற பழனிச்சாமிக்கு தைரியம் இருக்கிறதா? என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
திருவள்ளூர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து அமைச்சர் உதயநிதி பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர்; பொன்னேரி சட்டமன்றத் தொகுதியில் ஏராளமான நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. பொன்னேரியில் ரூ.42 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைக்கப்பட்டு வருகிறது.
ஆரணி ஆற்றங்கரையில் இருபுறமும் காங்கிரீட் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. ரூ.55 கோடியில் பொன்னேரி பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது. பொன்னேரி அரசு மருத்துவமனை முதல் தரமான மருத்துவமனையாக மாற்றப்படும். குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்படும். விம்கோ நகரில் இருந்து மீஞ்சூர் வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்படும். திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்விடியல் பயணம் திட்டம் பிற மாநிலங்களிலும் பின்பற்றப்படுகிறது. விடுபட்ட அனைவருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும். புதுமைப்பெண் திட்டம் மூலம் 3 லட்சம் பெண்கள் பயனடைந்துள்ளர். மாணவர்கள் உயர்கல்வி பயில்வதற்காக தமிழ்ப்புதல்வன் திட்டம். முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மூலம் மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளது. பாஜக ஆட்சியில் கூறப்பட்டுள்ள வாக்குறுதிகள் விசதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதா?.
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை பிரதமர் நேரில் வந்து பார்க்கவில்லை.எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டி 5 ஆண்டுகள் அாெதிகள் ஆகியும் இன்னும் கட்டி முடிக்கவில்லை. தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக சொதிகன் ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கவில்லை. சிஏஏ சட்டத்திற்கு ஆதரவாக அதிமுக வாக்களித்தது. உரிமைகளை மீட்போம், தமிழ்நாட்டை காப்போம் என ஜொதிகன் பழனிசாமி கூறுகிறார். மீண்டும் மோடி வரக்கூடாது என கூற பழனிச்சாமிக்கு தைரியம் இருக்கிறதா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்