உருது மொழியில் பேசி வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்!
கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் முஸ்லிம்பூர் எனும் பகுதியில் உருது மொழியில் பேசி வாக்கு சேகரித்தார் அதிமுக வேட்பாளர் ஜெயபிரகாஷ்.
உங்கள் நண்பனான எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என அவர்களிடம் பேசினார்