டெல்லி முதல்வர்
டெல்லியில் ஜனாதிபதி ஆட்சிகொண்டு வர சதி நடக்கிறது: டெல்லி முதல்வர்
டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று ஆஜர்படுத்தினர்.
அப்போது செய்தியாளர்களுக்கு அர்விந்த் கெஜ்ரிவால் பேட்டியளித்தார். அப்போது கூறியதாவது;
டெல்லியில் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்த மிகப்பெரிய சதி நடப்பதாகவும், சதியை முறியடிக்கும் வகையில் டெல்லி மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றும் அவர் கூறினார். மேலும், மதுபானக் கொள்கை வழக்கில் தன்னை சிக்க வைக்க வேண்டுமென்றே செயல்பட்டுள்ளது அமலாக்கத்துறை. தனது கைது அரசியல் சதி என்றும் காழ்ப்புணர்ச்சி காரணமாக கைது செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்