நிர்மலா சீதாராமன்
தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு என்னிடம் பணம் இல்லாததால், மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரி அல்லது ஆந்திராவில் இருந்து நிர்மலா சீதாராமன் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாஜகவினர் வெளியிட்ட வேட்பாளர்கள் பட்டியலில் அவரது பெயர் இடம்பெறவில்லை. இது குறித்து, பல்வேறு யூகங்கள் கிளம்பிய நிலையில், தனியார் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியின் போது, நிர்மலா சீதாராமன் மவுனம் கலைந்துள்ளார்.
அதில் பேசிய அவர், “பாஜக தலைமை எனக்கு தமிழகம் அல்லது ஆந்திராவில் போட்டியிட வாய்ப்பு வழங்கியது… எதில் போட்டியிடுவது என 10 நாட்களுக்கும் மேலாக யோசித்தேன்… இறுதியில், தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு என்னிடம் பணம் இல்லை என்பதால், நான் போட்டியிடவில்லை என்று தலைமையிடம் தெரிவித்து விட்டேன்….” என்று கூறியுள்ளார்.