வீட்டின் பின்புறம் சாராயம்
பேரணாம்பட்டு பகுதியில் வீட்டின் பின்புறம் சாராயம் விற்றுக் கொண்டிருந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் சின்னதுரை தலைமையிலான போலீசார் பேரணாம்பட்டு பகுதியில் சாராய வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் சட்டவிரோதமாக சாராயம் விற்றுக் கொண்டிருந்த கோட்டை காலனி பகுதியை சேர்ந்த அள்ளி (29) என்பவரை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 150 லிட்டர் கள்ள சாராயத்தையும் போலீசார் பறிமுதல் செய்து அள்ளியை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.