எப்படி தமிழர் திருநாளை கொண்டாடுவது !!!
உதையசூரிய கிரகணத்தின் காரணமாக துளிர்த்து தழைத்து வளர்ந்த 53 ஆண்டு கால இலை தழையின் ஆட்சியில் இயற்கை வளம் எவ்வளவு சீரும் சிறப்பாக இருக்கிறது இதை நான் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டிய அவசியமில்லை…!
பருவ கால மாற்றத்தால் பரிதவிக்கும் டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு இந்த தைத்திருநாளில் எப்படி விழா எடுத்து கொண்டாட முடியும் என்கின்ற வேதனை கடந்த சில நாட்களாக என் மனதில் நெருப்பு ஆறாக ஓடிக்கொண்டே இருக்கிறது…!
பருவம் தவறி பெய்து வரும் கனமழையால்… விவசாயிகளின் உழைப்பின் பரிசான நெற்கதிர்கள் நீரில் மூழ்கி அழுகி வரும் அவல நிலையைப் பார்க்கும்போது கல் நெஞ்சும் கரையும்…
நவ நாகரீக கோமாளிகளின்அறிவியல் கேலிக்கூத்தால்.. பிரபஞ்சத்தின் பூதங்களின் சுற்றுச்சூழல் மாசுபட்டு, நாசமாகி, தேவையற்ற மாறுதல்களை உருவாக்கிவிட்டது. அறிவியல் அயோக்கியத்தனத்தின் காரணமாக தான்.
பருவ நிலை பாழ்பட்டு மாறிவிட்டது என்கின்றது ஒரு விஞ்ஞான ஆய்வு…
ஆய்வுகள் எப்படியோ இருக்கட்டும். நாம் கண்முன்னே ஓடைகளும் ஏரிகளும் கபாலி கரம் செய்துகொண்டு அடுக்குமாடி குடியிருப்பு கட்டி அங்கே ஆனந்த கூத்தடிக்கும் அயோக்கியத்திற்கு வேறென்ன சாட்சி வேண்டும்.
காலம் கடந்து நீதிமன்றம் நீர் நிலைகளைப் பற்றி வருத்தப்படுகிறேன் என்கின்றது..!
எல்லாம் கடந்து விட்டது…!
வருமுன் காக்க வேண்டும் என்ற எண்ணம் ஆட்சியாளர்களுக்கு என்றுமே இருப்பதில்லை என்பதற்கு இதுவே ஒரு சான்று…!
பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம் என்பதைப்போல்..
பணத்தை தின்னும் படித்தவன் செய்த பாவத்தால், பாமர விவசாயிகள் பரிதாபமாக பாதிக்கப்படுவது எந்த வகையில் நியாயம் என்பது தான் புரியவில்லை….!
எல்லாம் காலம் செய்த கோலம்…!
நாய் வாலை வெட்டி அந்த நாய்க்கு சூப்பு போட்டு கொடுக்கும் நயவஞ்சக அரசியல்வாதிகளின் இலவச கபட நாடகத்தால்…
இனித்தவாயர்களாகிப் போன வாக்காளப் பெருங்குடி மக்கள்
எல்லாம் வாக்குகளை மாற்றி போட்டதால் வந்த அவலம்….!
விவசாய நிலங்களை வீட்டு மனையாக மாற்றிய அரசியல் சாகசம், நாளை நமது சோற்றுக்கு ஆப்படித்துவிட்டது என்பதை யாரும் நினைவு கொள்ளவில்லை…
இனியும் விவசாயிகளும், விவசாயக் கூலித் தொழிலாளர்களும், பாமரர்களும் மாறவில்லை என்றால் அவர்கள் மட்டுமல்ல நமது சந்ததிகளின் கதியும் அதோகதிதான்…!
தமிழர் திருநாளில் வேதனையுடன் சங்கரமூர்த்தி….