அதிமுக மாஜி அமைச்சர் நக்கல்

ஓபிஎஸ்சுக்கு திருவோடு சின்னம் தான் கிடைக்கும்: அதிமுக மாஜி அமைச்சர் நக்கல்

 ஈரோடு நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக ஆற்றல் அசோக்குமார் போட்டியிடுகிறார். இதையடுத்து இன்று காலை ஈரோடு அரசு மருத்துவமனை எதிரில் தேர்தல் பணிமனை திறப்பு விழா நடைபெற்றது. விழாவில், அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்துகொண்டு பணிமனையை திறந்து வைத்தார். இதில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, கே.வி.ராமலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதை தொடர்ந்து நிருபர்களிடம் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியதாவது:
தேர்தல் பிரசாரம் ஏற்கனவே தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இரட்டை புறா, சேவல் சின்னம் என தனித்தனியாக அதிமுக பிரிந்து நின்றபோது ஈரோடு அதிமுகவின் கோட்டை என நிரூபிக்கப்பட்ட நிலையில், தற்போது வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. இரட்டை இலை சின்னம் என்பது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவுக்கு சொந்தமானது.இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.

இதையடுத்து முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் குறுக்கிட்டு, ‘ஓ.பன்னீர்செல்வத்துக்கு திருவோடு சின்னம் தான் கிடைக்கும்’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published.