பிரபல நடிகர் “லொள்ளு சபா”சேஷு
பிரபல நடிகர் “லொள்ளு சபா”சேஷு நேற்று (26.03.2024) உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். தனியார் தொலைக் காட்சியில் வெளியான”லொள்ளு சபா”நகைச்சுவை நிகழ்ச்சியின் வாயிலாக பிரபலமடைந்தவர் சேஷு.இவருக்கு வயது அறுபது.
“ஏ 1″படத்தில் இவரின் நகைச்சுவை நல்ல ஹிட்டானது.”வடக்குப்பட்டி ராமசாமி “படத்திலும் என்று இவரது நகைச்சுவை நடிப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. “பாரிஸ் ஜெயராஜ்”படத்திலும் இவரின் நகைச்சுவை பிரபலமானது. கடந்த 15 ஆம் திகதி மாரடைப்பு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த
நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இலவச திருணம்,கல்வி,
மருத்துவம் என பல்வேறு சமூகப் பணிக்கு
நிதியுதவி வழங்கியவர் திரு.சேஷு அவர்கள்.அன்னாரின் மறைவுக்கு தமிழத்திரையுலகமும், ரசிகர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.இலங்கை ரசிகர்கள் சார்பாக எமது ஆழ்ந்த இரங்கலையும்,
கண்ணீர் அஞ்சலியையும் திரு.சேஷு அவர்களுக்கு தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்.