சென்ட்ரல் பேங்க்கில் 3 ஆயிரம் அப்ரன்டிஸ்கள்

பயிற்சி: Apprenticeship Training.
மொத்த காலியிடங்கள்: 3 ஆயிரம்
உதவித் தொகை: ரூ.15,000.

வயது வரம்பு: 31.03.2024 தேதியின்படி 20 முதல் 28க்குள் இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி/ஒபிசி/ மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு விதிமுறைப்படி அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
ஆன்லைன் எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள், காலியிடம் ஏற்பட்டுள்ள மாநிலத்தின் உள்ளூர் மொழியில் பேசும் திறன், நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் 10ம் வகுப்பு வரை தமிழை ஒரு பாடமாக படித்ததற்கான சான்றை சமர்ப்பிக்க வேண்டும்.
கட்டணம்: பொது/ ஒபிசியினருக்கு ரூ.800/-. எஸ்சி/எஸ்டியினர் மற்றும் பெண்களுக்கு ரூ.600/-. மாற்றுத்திறனாளிகளுக்கு ₹400/-.

www.centralbankofindia.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published.