வத்தலக்குண்டுவில் அச்சுறுத்தும் தெருநாய்கள்
வத்தலக்குண்டுவில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் திரியும் தெருநாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.வத்தலக்குண்டுவில் தெருநாய்கள் அதிகளவில் வலம் வருகின்றன. இவைகள் சாலைகளில் செல்வோரை விரட்டி சென்று கடித்து காயப்படுத்தி வருகின்றன. மேலும் சாலையில் டூவீலர்களில் செல்வோரை கடிக்க விரட்டுவதால் அவர்கள் விபத்தில் சிக்கி காயமுற்று வருகின்றனர்.
இதனால் பொதுமக்கள், வாகனஓட்டிகள் வெளியில் வரவே அச்சமடைந்துள்ளனர். மேலும் தோல் நோயால் பாதிக்கப்பட்ட தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. இதனால் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரு நாய்களை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘ேதால் நோயால் பாதிக்கப்பட்ட தெருநாய்களுக்கு உரிய சிகிச்சையளிக்க வேண்டும், தெருநாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்த கருத்தடை செய்ய வேண்டும்’ என்றனர்.