போர்டிகா மலர்கள்

சுற்றுலா பயணிகளை கவரும் டைமண்ட் போர்டிகா மலர்கள்

ஊட்டி தாவரவியல் பூங்கா ஜப்பான் பூங்காவில் பூத்துள்ள டைமண்ட் போர்டிகா மலர்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. நீலகிரி மாவட்டத்திற்கு தினமும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கு செல்கின்றனர். இங்கு செல்லும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் பொருட்டு, பூங்காவில் பல லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு அதில் மலர்கள் பூத்துக் காணப்படும்.

இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வார்கள். கோடை சீசன் நெருங்கிய நிலையில், தற்போது தாவரவியல் பூங்காவில் பல லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன.
மேலும், 35 ஆயிரம் தொட்டிகளிலும் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பூங்காவில் மலர்கள் இன்றி காட்சியளிக்கிறது. அதேசமயம், ஜப்பான் பூங்காவில் மட்டும் மைண்ட் போர்டிகா எனப்படும் மலர்கள் பல வண்ணங்களில் பூத்துக் காணப்படுகிறது. பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த மலர்களை கண்டு ரசித்து செல்வது மட்டுமின்றி, அதனை புகைப்படமும் எடுத்துச் செல்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.