ஜவ்வாது மலை பகுதியில் பெருங்கற்கால மனிதர்கள் வாழ்ந்த தடயங்கள்
ஜவ்வாதுமலையில் பெருங்கற்கால மனிதர்கள் வாழ்ந்த தடயங்களை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்தனர்.திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலை பகுதியில், கற்கால மனிதர்கள் வாழ்ந்த தடையங்கள் நினைவுச் சின்னங்கள் ஆகியவை உள்ளன. எனவே, ஜவ்வாது மலை பகுதியில் தொல்லியல் துறையினர் தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஜவ்வாது மலையில் உள்ள மேல் செப்பிலி மற்றும் கீழ் செப்பிலி கிராமங்களுக்கு அருகில், பெருங்கற்கால சின்னங்களைகுள்ளர் குகைகள் என மலைவாழ் மக்கள் அழைக்கும் பெருங்கற்கால சின்னங்களை தொல்பொருள் துறை அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆய்வு நடத்தினர்.
மேல்செப்பிலி மற்றும் கீழ் செப்பிலி கிராமங்களுக்கு அருகே 100க்கும் மேற்பட்ட பெருங்கற்கால புதை குழிகள் சுமார் 7.5 மீட்டர் அகலம் 1.5 மீட்டர் உயரம் கொண்டதாக இருந்ததை ஆய்வு நடத்தினர். கற்கால மனிதர்கள் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய இந்த புதைக்குழிகளை பயன்படுத்தி உள்ளனர். மேலும், இறந்தவர்கள் உடலுடன் அவர்கள் பயன்படுத்திய கற்கால கருவிகளையும் சேர்த்து அடக்கம் செய்வது கற்கால மனிதர்களின் வழக்கமாக இருந்துள்ளது.