ரோஜா இதழில் கொட்டி கிடக்கும் மருத்துவ குணங்கள்
உடல் சூட்டை தணிக்கும்:
ரோஜா பூக்கள் குளிர்ச்சி தன்மை உடையவை. ரோஜா இதழ்கள் உடலில் இருக்கும் அதிகப்படியான வெப்பத்தை தனித்து சமநிலைப்படுத்துகிறது. இது தவிர சரும எரிச்சல், அசிடிட்டி போன்ற நிலைகளையும் குறைக்கிறது.
மூல வியாதிக்கு மருந்து:
ரோஜா இதழ்கள் மூலநோய்க்கு மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, மூல நோய் உள்ளவர்கள் ரோஜா இதழ்களை தண்ணீரில் சேர்த்து காய்ச்சி குடித்து வர மூல நோய் விரைவில் குணமாகும்.
வயிற்றுப்போக்கு நிற்க:
வயிற்றுப்போக்கால் அவதிப்படுபவர்கள் ரோஜா இதழ்களை நன்றாக கழுவி 1 கைப்பிடி அளவிற்கு நன்றாக மென்று சாப்பிட்டு வர வயிற்றுப்போக்கு நீங்கிவிடும்.