பஞ்சாபி ஸ்டைல் வெண்டைக்காய் மசால் செய்முறை

தேவையான பொருட்கள் வெண்டைக்காய் – 1/4 கிலோ, எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன், சீரகம் – 1 டீஸ்பூன், பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது) தக்காளி- 2 பச்சை மிளகாய்  1, இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன், கரம் மசாலா – 1/2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன், தனியாத் தூள் -1 டீஸ்பூன், மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன், உப்பு -1/2 டீஸ்பூன், தயிர் – 3 டேபிள் ஸ்பூன்.

செய்முறை

முதலில் அடுப்பில் பேன் வைத்து சூடானவுடன் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வெண்டைக்காவை கொஞ்சம் பெரிதாக நறுக்கி சேர்த்து அதன் வழவழப்பு தன்மை போகும் வரை வதக்கி விடுங்கள். அதன் பிறகு வெண்டைக்காய் நிறம் மாறும் போது இறக்கி தட்டில் கொட்டி ஆற விடுங்கள்.

இப்போது அதே பேனை மீண்டும் வைத்து மீதம் இருக்கும் எண்ணெயை அதில் ஊற்றி சீரகம் போட்டு பொறிந்த பிறகு நறுக்கி வைத்த வெங்காயத்தை சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கி விடுங்கள். அதன் பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அதன் பச்சை வாடை போகும் வரை வதக்கிக் கொள்ளுங்கள். அடுத்து மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், உப்பு அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்கிய பிறகு தக்காளியை மிக்ஸி ஜாரில் அரைத்து அதையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது இவை அனைத்தும் நன்றாக வதங்கி பச்சை வாடை போகும் வரை காத்திருங்கள். இதன் பச்சை தன்மை போன பிறகு தயிர் சேர்த்து ஒரு முறை கலந்து விடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published.