தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராட்டம்
டெல்லியின் அலிபூர் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து:
டெல்லி: தலைநகர் டெல்லியின் அலிபூர் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தொழிற்சாலைக்கு 25க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லியின் அலிபூரில் உள்ள ஒரு தொழிற்சாலையில் திங்கள்கிழமை காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க மொத்தம் 34 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன என டெல்லி தீயணைப்பு சேவைத் துறை தெரிவித்துள்ளது. தீயை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும், இந்த சம்பவத்தில் உயிர் சேதமோ, காயமோ ஏற்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக, நேற்று மதியம், டெல்லி நரேலாவில் உள்ள போர்கர் தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. நரேலா டிஎஸ்ஐஐடிசி தொழில்துறை பகுதி நலச் சங்கத்தின் தலைவர் பவன் குமார் கூறுகையில்; “தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் தொழிற்சாலையில் யாரும் இல்லை.