லாரி-சரக்கு ஆட்டோ மோதி டிரைவர் பலி
திருச்செங்கோடு, மார்ச் 25: திருச்செங்கோடு-ராசிபுரம் சாலை எலிமேடு அருகே, ராசிபுரத்திலிருந்து திருச்செங்கோடு நோக்கி மாட்டு தோல்களை ஏற்றிக்கொண்டு, மினிசரக்கு லாரி வந்து கொண்டிருந்தது. அப்போது முன்னே சென்ற காரை முந்த முயன்ற போது, தாறுமாறாக சென்று திருச்செங்கோட்டில் இருந்து, ராசிபுரம் நோக்கி வந்த லாரி மீது நேருக்கு நேராக மோதியது. இதில் சரக்கு ஆட்டோ முன்பகுதி நொறுங்கியது. ஆட்டோவை ஓட்டி வந்த டிரைவர் இடிபாட்டிற்குள் சிக்கிக் கொண்டார்.
தகவலின் பேரில், ஆம்புலன்ஸ் பணியாளர்கள் விரைந்து வந்து டிரைவரை பரிசோதனை செய்ததில், அவர் உயிரிழந்தது தெரிய வந்தது. தொடர்ந்து வந்த மீட்பு குழுவினர் டிரைவரின் சடலத்தை மீட்டனர். தகவலின் பேரில், புறநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் மினி லாரியை ஓட்டி வந்தவர் மணிகண்டன் (31), என்பதும் ராசிபுரம் அருகே உள்ள பாரப்பட்டியைச் சேர்ந்தவர் என்பது தெரிந்தது.