சி எஸ் ஐ கிறிஸ்து நாதர் ஆலயம் சார்பில் குருத்தோலை ஞாயிறு
கோவை காந்திபுரம் சி எஸ் ஐ கிறிஸ்து நாதர் ஆலயம் சார்பில் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம் ஆலயம் முன்பாக துவங்கியது. இதில் ஆயர் தலைவர் டேவிட் பர்னபாஸ் தலைமை தாங்கினார். செயலாளர் ஜெயச்சந்திரன் பொருளாளர் ரவி இன்பசிங்,உதவி ஆயர் சாம் ஜெபசுந்தர்,சபை ஊழியர் சந்தோஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஊர்வலத்தில், ஏராளமான ஆண்கள் பெண்கள் குழந்தைகள் குருத்தோலைகளை கையில் ஏந்திக்கொண்டு ஓசன்னா ஓசன்னா எனும் இயேசுவின் திரு நாமத்தை பாடியபடி ஊர்வலமாக சென்றனர்.