IPL 2024: ‘சிஎஸ்கே முழு அட்டவணை’
மக்களவை தேர்தல் காரணமாக, ஐபிஎல் 17ஆவது சீசனுக்கான அட்டவணை, முழுமையாக வெளியிடப்படவில்லை. மொத்தம் 21 போட்டிகளுக்கான அட்டவணைதான் தற்போது வெளியாகி உள்ளன.
21 போட்டிகளில், சிஎஸ்கேவுக்கு 4 போட்டிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மார்ச் 22ஆம் தேதி, அதாவது இன்று ஆர்சிபி, அடுத்து குஜராத் டைடன்ஸ், டெல்லி கேபிடல்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகளுக்கு எதிராக போட்டி நடைபெறும்.
இன்று ஆர்சிபிக்கு எதிரான ஆட்டம். அடுத்து, மார்ச் 26ஆம் தேதி குஜராத் டைடன்ஸுக்கு எதிராக, தொடர்ந்து மார்ச் 31ஆம் தேதி டெல்லி கேபிடல்ஸ்க்கு எதிராக, ஏப்ரல் 5ஆம் தேதி சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக போட்டி நடைபெறும்.
ஐபிஎல் 17ஆவது சீசனுக்கு, தற்போதுவரை 21 போட்டிகளுக்கான அட்டவணைதான் வெளியிடப்பட்டுள்ளது. எஞ்சிய போட்டிகளுக்கான அட்டவணை விரைவில், எப்போது வேண்டுமானாலும் வெளியிடப்படும் எனக் கூறப்படுகிறது.