‘அக்னிபான்’ விண்ணில் செலுத்தபடாது
நாளை விண்ணில் பாய்வதாக இருந்த ‘அக்னிபான்’ ராக்கெட்டில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விண்ணில் செலுத்தபடாது என அறிவிப்பு
இஸ்ரோவின் பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி மற்றும் எஸ்எஸ்எல்வி வகைகளை தொடர்ந்து தனியார் பங்களிப்புடன் புதியவகை ராக்கெட் நாளை அறிமுகம் செய்வதாக இருந்தது. ஐஐடி சார்பில் உருவாக்கப்பட்ட ‘அக்னிபான்’ ராக்கெட் சோதனை முயற்சியாக நாளை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டிருந்தது. நாளை காலை 6.30 மணி முதல் 7 மணிக்குள் ‘அக்னிபான்’ ராக்கெட் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டிருந்த நிலையில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மைய வளாகத்தில் சென்னையை சேர்ந்த விண்வெளி தொழில்முனைவோரால் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மற்றொரு தனியார் ஏவுதளம் ஒன்று புதிதாக அமைக்கப்பட்ட நிலையில் அதிலிருந்து முதன்முறையாக சென்னையை தளமாகக் கொண்ட ஐஐடி மெட்ராஸ் இன்குபேட்டர் ஸ்டார்ட்அப் தயாரித்து அக்னிபான் ராக்கெட் நாளை விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டிருந்தது.